Thursday, August 25, 2016

Thokapiyam?

குறிஞ்சி, முல்லை கடவுள்களான சேயோனையும் (முருகன்) மாயோனையும் (விஷ்ணு) போற்றும் நீங்கள் மருதம்,நெய்தல் கடவுள்களான
இந்திரன்,வருணன் ஆகியவர்களை மறந்தது ஏன்?
தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூலான
#தொல்காப்பியம் பாடல் இது
#மாயோன் மேயக் #காடுறை உலகமும்
#சேயோன் மேய #மைவரை உலகமும்
#வேந்தன் மேயத் #தீம்புனல் உலகமும்
#வருணன் மேயப் #பெருமணல் உலகமும்
(
பொருளதிகாரம்-5)
பொருள்;
தொல்காப்பியம் திருமால்(விஷ்ணு),முருகன், இந்திரன், வருணன் என்னும் தெய்வங்களை நான்கு நில தெய்வங்களாகக் காட்டுகிறது;
"#குறிஞ்சி(மைவரை)கடவுள் #முருகன்(சேயோன்)
#முல்லை(காடுறை) கடவுள் #திருமால்(விஷ்ணு)(மாயோன்)
#மருதம் (தீம்புனல்) கடவுள் #இந்திரன் (வேந்தன்)
#நெய்தல் (பெருமணல்) கடவுள் #வருணன் "
என்று #தொல்காப்பியம்
கூறுகிறது.

உலகின் மிகத்தொன்மையான #இந்து வேதமான#ரிக்வேதத்தில் குறிப்பிடும் வருணன், இந்திரன் ஆகிய கடவுள்களை பண்டைய #தமிழர்கள்வணங்கியுள்ளனர்.என்பதற்கு இந்தப் பாடல் ஆதாரமாகும்.

Tuesday, August 23, 2016

Best Lines . . .

கொல்கத்தா பாடசாலை ஒன்றில் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இது ....

‪#‎கட்டாயம்படியுங்கள்

அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

பரீட்சைக்குத் தேற்றும் மாணவர்களுல்..
ஒரு கலைஞன் இருப்பான்
அவனுக்கு கணிதம் தேவைப்படாது.

அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்
அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.

ஒரு இசைஞானி இருப்பான்
அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.

ஒரு விளையாட்டு வீரனிருப்பான்
அவனது உடல் நலனே முக்கியமன்றி
பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

ஒரு தனிமொழி அறிஞனிருப்பான் __
அவனுக்கு ஆங்கிலத்தில் ஆர்வமிருக்காது__
ஆங்கிலம் மட்டுமே முக்கியமில்லை....

பரீட்சையில் அதிக புள்ளி எடுத்தால் சிறந்த பிள்ளை.. எடுக்காவிட்டால்..
தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையைப் பறித்து விடாதீர்கள்.
சொல்லுங்கள் அவர்களுக்கு,....

இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.
நீ வாழ்கையில் வெற்றி கொள்ளக்கூடிய 
இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.
உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் 
புள்ளியை வைத்து தீர்மானிப்பதில்லை.

என்றும் நீ என் பிள்ளை_ என் உயிர்.
இப்படி சொல்லி பாருங்கள்.....

பரீட்சையை வெல்லாத உங்கள் பிள்ளை 
ஒரு நாள் உலகை வெல்வான்.
வெறுமனே ஒரு பரீட்சை
அதன் புள்ளி உங்கள் பிள்ளையின் கனவை
திறமைகளை அழித்து விடக்கூடாது.

வைத்தியர்களும் பொறியியலாலர்களும் மட்டுமே 
உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் 
என தயவு செய்து நினைக்காதீர்கள்.


இன்னும் எத்தனையோ உள்ளது வாழ்க்கையில்........ ‪#‎வாழ்க்கையின்ஆனந்தம்வழிநெடுகஉள்ளது_ஒரேஇடத்தில்தேடாதீர்கள்......

Monday, August 22, 2016

Tamilan's Litreature Period Water Management in 47 Methods are . .

நமது தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்டு இருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47...


(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2)
அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3)
ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4)
ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5)
இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6)
உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7)
ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8)
ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9)
ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10)
ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11)
கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12)
கடல் (Sea) - சமுத்திரம்.
(13)
கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14)
கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15)
கால் (Channel) - நீரோடும் வழி.
(16)
கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17)
குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18)
குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19)
குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20)
குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21)
குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22)
குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23)
குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24)
கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25)
கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26)
வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27)
கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28)
சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29)
சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30)
சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31)
தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32)
தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33)
தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34)
திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35)
தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36)
தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37)
நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38)
நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39)
பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40)
பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41)
பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42)
மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43)
மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44)
மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45)
மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46)
வளையம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47)
வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.