Wednesday, August 26, 2015

வெற்றிலை – சுபிட்சத்தின் அடையாளம்..!


இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனை த்திலும் முக்கிய இடம் வகிப்பது வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை.
வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பி க்கப்படுகிறது. தேவி யின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண் மை! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தி யின் வடிவம். பச்சைஇலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண் மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாதது போல் வெற்றிலை யின்றி வழி பாடு இல்லை.
திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என் கிறார்கள். வெற்றி லை பாக்கு கொடுத்து விட் டால் அது தாம்பூல சத்தியம்.பிறகு அதை யாரும் மீறத்துணியமாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த் தம் செய்யும்போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர் கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர்வார்த்துக் கொடுப் பது வழக்கம். வட இந்தியாவி லும் இந்த வழக்கம்பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவ ளியன்று லக்ஷ்மிபூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையை யும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்து வைப்பார். லக்ஷ்மி, சர ஸ்வதி, துர்க்காவை இது குறி க்குமாம்.
மாங்கல்ய தாரணம் முடிந்ததும் வந்தோரனை வரும் வாழ்த்தி விட்டு விருந்து ண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்ப மாட்டா ர்கள். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண் ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம்.
நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு செல்லலாமா? ---------------------------------------------------------------------------


இறைவனின் படைப்பில் மனிதர்களே சிறந்த படைப்பாகும்.மனிதர்களில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்க்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள்.ஒரு உயிரை உருவாக்கும் பெரும்பங்கு பெண்களையே சாரும் அதனால்தான் பெண்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகின்றது.
அந்த கால கருங்கல் கோவில்கள் மனித உடல்நிலை வெப்பநிலையை பொறுத்தே அமைக்க பட்டது . அதாவது மனித உடலின் சராசரி வெப்பநிலை எவ்வளவோ அதே வெப்பநிலை கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் உண்டு .
மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் .அந்த நேரங்களில் கோவில்களுக்கு பெண்கள் வந்தால் இன்னும் அதிக படியான உஷ்ணம் உண்டாகும் . இதனால் அதிக படியான ரத்தபோக்கு உண்டாகும் . இதை கருத்தில் கொண்டே கோவில்களுக்கு மாதவிடாய் காலங்களில் பெண்கள் வரக்கூடாது என்று முன்னோர்கள் கூறினார் .
ஒரு பெண்ணிற்குள் உள்ளே என்ன இருக்கிறதோ அதே இரத்தம் தான் மாதவிலக்கு நேரத்தில் வெளியேறுகிறது. மேலும் எந்த இரத்தம் வெளி ஏறுகிறதோ, அதிலே தான் ஒவ்வொரு மனிதனும் கருவாகி, பின்பு திசுவாகி, பிள்ளையாகி, பெரிய ஆளாகிறான்.
அந்த காலங்களில் பெரியவர்கள் மாதவிலக்கு நேரத்தில் பூரண ஓய்வினை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை கொண்டு செயல்பட்டனர்.
இதுவே காலப்போக்கில் தீட்டு நாட்களில் பெண்களை தீண்ட கூடாது மற்றும் இறைவழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற மூட நம்பிக்கையாக உருவெடுத்துவிட்டது என்பதே உண்மையான விசயமாகும்.

Tuesday, August 25, 2015

தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?


தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள்
மனைவி என்பதே இதன் பொருள்.
ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர்.
அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...


உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.
சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.
சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.
✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல.
எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு. ,

Sunday, August 23, 2015

சிரஞ்சீவி’ என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

அதாவது மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்களை ‘சிரஞ்சீவி’ என்பர்.
அஸ்வத்தாமன், மகாபலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன், மார்கண்டேயன் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் எனப்படுவர்.
மரணமில்லாப் பெருவாழ்வு எய்தியிருக்கும் இவர்கள் பூதவுடலுடன் இல்லையென்றாலும் இன்னும் தங்கள் ஆன்மாவுடன் இங்கு உலவிக்கொண்டு தானிருக்கிறார்கள்.
இந்த சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். பின்னே இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்?
எமனுக்கு பயந்து 12 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.
மார்கண்டேயனுக்கு 12 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.
ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு உபநயனம் செய்வித்த பின்னர், “பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக” என்று பணித்தார்.
மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.
சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது, மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற, அவர்களும், “தீர்க்கா யுஷ்மான் பவ” என்று வாழ்த்திவிட்டார்கள்.
பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 12 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா?
இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.
இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.
பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.
பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.
எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும்.
அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல… உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது.

தமிழ் நாகரீகம் யாருக்கும் எதிரி அல்ல

தமிழ் நாகரீகம் யாருக்கும் எதிரி அல்ல. 
ஆனால் தமிழர் நாகரீகத்தை திட்டமிட்டே இதுவரை உள்ள அரசுகள் மறைத்து வருகின்றன.
பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.
17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.
ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)
[பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.
அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.
பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
(திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).
மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது.
ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது.
ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம்
கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.

Friday, August 21, 2015

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :


வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே!
அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் க்ரீடமும் , என் அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை.உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா. உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.
2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன் கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி, அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
3.சிறு சிறு வாக்குவாதங்கள்,கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் "," எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை.நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்,மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்.... *அப்பா புராணம் பாடாதே. *அப்பாவோடு ஒப்பிடாதே . *'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது . *அப்பாக்கு கொடுத்த க்ரீடத்தை அவருக்கும் கொடு.
22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனிமேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்....!
-அன்புடன் அப்பா.