Tuesday, March 10, 2015

ஜெயா

டீக் கடை வைத்து நடத்தும் பெண்களைப் பார்த்துப் பழகிய பலருக்கும் ஸ்கூட்டரில் சென்று டீ சப்ளை செய்யும் ஜெயாவைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கும். ஈரோடு குமலன்குட்டையைச் சேர்ந்த ஜெயாவுக்கு 42 வயது. டீ சப்ளை செய்வதில் இருபது வருட அனுபவம். சிறு வயதில் பவர்லூம் தறியில் வேலை பார்த்தவர், டீ மாஸ்டரைக் காதலித்துக் கரம் பிடித்தார். கணவர் பெருந்துறையில் டீ மாஸ்டராக இருக்க, இருசக்கர வாகனத்தில் டீ கேனைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிடுகிறார்.

“தினமும் லைனுக்கு டீ கொண்டு போவேன். டூவீலர் ஒர்க் ஷாப், கார் ஒர்க் ஷாப், லேத், கம்பெனி களுக்கு டீ, போண்டா, வடை, சமோசா சப்ளை செய்வேன். மதியம் 12 மணிக்கு மேல சின்னதா ஒரு கடை வச்சு வடை வியாபாரம் பண்றேன்” என்று சொல்லும் ஜெயா, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்துக்கொள்கிறார்.

“அன்னைக்கு ஏதாச்சும் சொந்தங்காரங்க விசேஷம் இருந்தா போயிட்டு வருவேன். மத்தபடி மழை பெஞ்சாலும், வெயில் அடிச்சாலும் டீ விக்கப் போயிடுவேன். செலவு போக தினமும் கூலி 500 ரூபா நிக்கும். எனக்கு எந்தக் குறையும் இல்லை. நான் நினைச்சபடியே வீடு கட்டியாச்சு. பையனும் எம்.பி.ஏ படிச்சுட்டு வேலைக்குப் போறான்” என்று ஜெயா சொல்லும்போது உழைத்து வாழ்வதில் இருக்கும் நிறைவை உணர முடிகிறது.

நம் எண்ணங்களுக்காக

Monday, March 9, 2015

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!
PETER விடும் சில தமிழ் மக்களே..படியுங்கள் ..
*************** *************** ***
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
*************** *************** ***
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள் ள நான் பெருமையடைகிறேன் . ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம்"கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய"அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங் களிலேயே பெரியது!!
இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கு ம் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன்பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த"வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவ ே செயல் பட்டு வருகின்றது!.
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட ்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால்இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்க ியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possibleto describe it with a pen, particularly since it is like no otherbuilding in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது . அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—mi ght takean honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ள ார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர்கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்ப ட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடியநாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப ் பொறுப்பு பொறிக்கப்பட்டுள ்ளது!.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த2012 வரை கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில்1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே! !
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது..
நம் எண்ணங்களுக்காக

இவர் யாரென்று தெரிகிறதா?

இவர் யாரென்று தெரிகிறதா?
இராணி மங்கம்மாள், மதுரையை ஆண்ட பெண்மணி. திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரைநாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.
மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும் தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார். ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார்.
மத நல்லிணக்கத்தில் ராணி மங்கம்மா ஆர்வம் காட்டியவர். கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாமல், இசுலாமியர்களுக்கும் மங்கம்மாள் மானியம் அளிக்கத் தவறவில்லை. 1701-ல் இசுலாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காகவும் திருச்சியிலுள்ள நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டு உள்ளது.
மதப்பிரச்சாரம் செய்து வந்த பாதிரியார்கள், தஞ்சாவூரை ஆண்டு வந்த மராத்திய மன்னன் ஷாஜியால் எச்சரிக்கப்பட்டனர். மேலும் அந்தப் பாதிரியார்களை நாடு கடத்த ஷாஜி உத்தரவிட்டான். மன்னனின் உத்தரவை மீறி மதம் மாறிய பாதிரியார்கள் மீது புது வரிகளை சுமத்தினான். வல்லத்தில் ஒரு பாதிரியார் கொல்லப்பட்டுள்ளார். (ஆதாரம்:வீரமாமுனிவர் கட்டிய திருக்காவலூர் (ஏலாக்குறிச்சி) கோவில் வரலாறு- கையேடு). அப்போது மங்கம்மாள் மதுரையை ஆண்டு வந்தார். இதனை இராணி மங்கம்மாள் கடுமையாக எதிர்த்தார்.
இராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது 'மங்கம்மாள் சத்திரம்' என இன்றும் அழைக்கப்படுகிறது. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை ' மங்கம்மாள் சாலை' என அழைக்கப்படுகிறது. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார். தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார். தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகும்.
மிகத்திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாளால் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே தனது பேரனாலேயே அவர் சிறையிலிடப்பட்டார். இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று இராணி மங்கம்மாள் 1706- ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
நம் எண்ணங்களுக்காக

வாழ்க்கையில் வரும்

வாழ்க்கையில் வரும் இயல்பான பிரச்சினை களை எதிர்கொள்ளத் திராணியற்று மரணத்தைத் தழுவிக்கொண்ட வெவ்வேறு விதமான மனிதர்களின் மரண வாக்குமூலங்களின் மூலம் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான உத்திகளையும் வழங்கும் நூல் இது. அதிலிருந்து ஒரு பகுதி.
ஒவ்வொரு மனிதருக்கு ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். ஆனால் எல்லோரும் ஒரே ஒரு கேள்வியைக் கேட்போம், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’
உலகத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷ மாக இருந்துகொண்டிருப்பதுபோலவும் தனக்கு மட்டும் பிரச்சினை, தனக்கு மட்டும் தோல்வி, தனக்கு மட்டும் சிக்கல் எனவும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த இடத்தில் ஒரு முக்கியமான மனிதரை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிருக்கிறது.
அவர் ஆர்தர் ஆஷே. பிரபல டென்னிஸ் வீரர். கறுப்பினத்தைச் சேர்ந்தவர். டென்னிஸ் என்பதுதான் இவருடைய கனவு, எதிர்காலம், எல்லாமும்.
ஆனால் டென்னிஸ் விளையாடச் செல்லும் இடங்களில் எல்லாம் பலவிதமான எதிர்ப்புகள், அவமதிப்புகள். ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு டென்னிஸ் விளையாடக் கற்றுக்கொண்டார். மிக நன்றாக விளையாடவும் செய்தார். வெற்றிகள் குவிந்தன. பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
உலகின் பிரபலமான அத்தனை போட்டி களிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் வந்தன. அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன் எனப் பல போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிகளைச் சுவைத்தார்.
திடீரென ஒருநாள் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மாரடைப்பு என்றார்கள். அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைகள் தரப்பட்டன. ஆஷே பிழைத்தார். டென்னிஸ் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். அந்தப் பெருமூச்சு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி வந்து சேர்ந்தது. ஆஷேவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
மீண்டும் மருந்துகள், மாத்திரைகள். ஆனாலும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. வெவேறு விதமான உடல்நிலைப் பிரச்சினைகள் தொடர்ந்தன. தீவிரப் பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தீய பழக்கவழக்கங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அவருக்கு எய்ட்ஸ் எப்படி வந்தது? ஆய்வுசெய்து பார்த்தபோது அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது ரத்தம் ஏற்றப்பட்டது. அந்த ரத்தம் ஹெச்.ஐ.வி. கலந்த ரத்தம். விஷயம் தெரிய வந்தபோது ரசிகர்கள் துடிதுடித்துப்போனர்கள். அவருடைய ரசிகர்களில் ஒருவர் ஆஷேவுக்குக் கடிதம் எழுதினார், ‘உங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’
அதற்கு ஆஷே நிதானமாகப் பதில் எழுதினார். ‘உலகில் 5 கோடி சிறுவர்கள் டென்னிஸ் விளையாட விரும்புகிறார்கள். 50 லட்சம் பேரே விளையாடுகிறார்கள். 5 லட்சம் பேரே முறையான பயிற்சியுடன் தேர்ச்சி பெறுகிறார்கள். அவர்களில் 50 ஆயிரம் பேருக்குதான் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால் அவர்களில் 5 ஆயிரம் பேரால்தான் விளையாட முடிகிறது. அவர்களில் 50 பேர்தான் விம்பிள்டன் போன்ற சர்வதேசப் போட்டிகளுக்கு வருகிறார்கள். அவர்களில் நான்கு பேர்தான் அரை இறுதிக்கு முன்னேறுகிறார்கள். இருவர் இறுதிப் போட்டியில் மோதுகிறார்கள். ஒருவருக்குத்தான் கோப்பையை வெல்கிறார்கள்.
எனக்கு மட்டும் ஏன்? என அப்போது நான் கேட்கவில்லை.
நம் எண்ணங்களுக்காக

Sunday, March 8, 2015

பத்மாசனம்

பத்மாசனம்
நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் : இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.

பலி பீடத்தை

கோயிலில் பலி பீடத்தை தொட்டுக் கும்பிடலாமா?
கோயிலில் கோபுர வாசலுக்கும், கொடிமரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு பலிபீடம் என்று பெயர். நித்யபூஜையின்முடிவில், பலிபீடத்தில் கோயிலிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனைதெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்.

குணங்கள்

குணங்கள்!
மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்று கூறுகின்றனர். அவை ..
1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17. குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல்
21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.