Tuesday, November 12, 2024

சூரிய நமஸ்காரம் ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

 


சூரிய நமஸ்காரம் ஆன்மீகமா? மூட நம்பிக்கையா?

அதிகாலையில் குளித்து முடித்த உடன் கிழே உதிக்கும் சூரியனை பார்த்து வணங்குவது இந்துக்களின் மரபு…

கேட்டால்…

சூரிய பகவான் பஞ்ச பூதங்களில் ஒன்று சூரியன் இல்லையேல் வெளிச்சம் இல்லை ஓளி இல்லை உலக உயிர்களின் ஆதாரம் அதனால் வணங்குகிறேன் என்று சொல்வார்கள்.

சூரிய நமஸ்காரம் செய்ய இதுமட்டும்தான் காரணமா?

இல்லவே இல்லை..

பின்னர் எதுக்காக சூரிய நமஸ்காரம், நம் அன்றாட பழக்கவழக்கத்தில் முதலில் சேர்க்கப்பட்டது?

நம் உடலுக்கு தேவையான வைட்டமின் “D” சத்து சூரிய ஒளி மூலம் மட்டுமே கிடைக்கும். அதற்கு மருந்து மாத்திரை எதுவும் கிடையாது. வேறு வழியில் பெறவும் முடியாது.

காலையில் எழுந்து குளித்து முடித்த உடன் சூரியனை பார்த்து நமஸ்கரிக்கும்போது நமக்கு தேவையான வைட்டமின் டி சத்தும் கண்களுக்கு தேவையான காந்த சக்தியும் கிடைக்கும் மனதும் ஒருநிலைப்படும்,

சூரியனை ஒரு முறையும் நம் மூக்கின் நுனியையும் மாறி மாறி தினமும் 20 முறை பார்த்து பயிற்சி எடுத்து வந்தால் பார்வை கோளாறுகள் வராது அப்படியே இருந்தாலும் கோளாறுகள் சரியாகிவிடும்.

முயற்சித்துதான் பாருங்களேன் உண்மை புலப்படும்.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் எந்த பிராமணன் கண் கண்ணாடி போட்டிருக்கான்?

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


மனிதன் சைவமா / தாவர உண்ணியா? அல்லது அசைவமா விலங்கு உண்ணியா? ஏன்?



 

மனிதன் சைவமா / தாவர உண்ணியா? அல்லது அசைவமா விலங்கு உண்ணியா?  ஏன்?

தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..
தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...

தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை.

 தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.

மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்? 

தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்..

நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும்.

ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ  இது சாத்தியமில்லை!

எங்கே தவறு நடந்தது?

பாலைவன அரபு நாட்டிலும், பனி படர்ந்த மேலை நாட்டிலும் செழுமையான பயிர்கள் தாவரங்கள் காய் கனிகள் கிடைப்பது அரிது..

அவர்கள் விலங்கு மாமிசம் சாப்பிட்டுதான் உயிர் வாழவேண்டிய சூழ்நிலை. தட்பவெப்ப நிலைக்கும் அதுதான் ஏற்றது.

ஆனால் பாரதம் போன்ற மிதமான வெப்பநிலை உள்ள நாடு பூராம் நதிகள் பாய்ந்து செழுமையாக பச்சை பசேல் என்று இருக்கும் இங்கு காய்கறிக்கும் பழங்களுக்கும் பஞ்சமில்லை. நாம் ஏன் விலங்குகள் அடித்து சாப்பிட வேண்டும்?

 நாக்கு தான்.

வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து,

பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும்

அன்னியர் உணவு பழக்கவழக்கத்துக்கு நாம் ஏன் அடிமை ஆகனும்?

கார்பரேட் பிசினஸ்...

நம்மை விலங்கு உணவுகளுக்கு அடிமை ஆக்கி நோயாளியாக்கிவிட்டு அவர்கள். ஆர்கானிக் இயற்கையில் விளைவித்த உணவு பண்டங்கள் காய்கறிகள் பழங்கள் இறக்குமதி செய்து உண்டு சிலாகிக்கிறார்கள்.

அதனால்தான் இந்துக்கள் தாவர உண்ணிகளாக வலியுறுத்தப்படுகிறது. முடியாதவர்கள் ஆன்மீக ஈடுபாட்டின் போதாவது தாவர உண்ணியாக இருக்க கூறுகிறது.

இது உண்மைதானா என்று யோசித்திக் கொண்டே இருக்க,

திருவள்ளுவரின் குறள்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.

என்றென்றும் அன்புடன்

 

சுந்தர்ஜி

Sunday, November 10, 2024

தலையை சொறிவது ஏன்?

 


தலையை சொறிவது ஏன்?

மருத்துவம் அறிவியல் என்று தெரியுமா?

தலையை ஏன் சொறிகிறோம்?

வெறும் பேன் தொல்லை அழுக்கு மட்டும்தானா காரணம்?

கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் மாணவர்கள் முதல் அனேகம் பேர் தலையை சொறிவார்கள்?

அப்படி பதில் தெரியாததற்கும் தலையை சொறிவதற்கும் என்ன சம்பந்தம்?

தலையை சொறிவதால் மறந்து போனது நினைவு வர வாய்ப்பிருக்கிறது.

விரல்களில் அடிக்கடி சொடக்கு எடுக்கிறோமே ஏன்?

கடும் வேலைக்கு பிறகு உடல் அசதியைநொடிகளில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் அந்த சிகிச்சையை நமக்கு சொல்லிக்கொடுத்தது யாரு?

நாடியில் விரல் வைத்து யோசிக்கிறோமே ஏன்…?

கோபத்தை அடக்கும்போது பல்லை நறநற என்று கடிக்கிறோம். இதெல்லாம் எதற்காக?

ஒரு பதட்டம், எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ்  கையை பிசைந்துகொண்டு குறுக்கும் நெடுக்கும் அலைவது நமக்கு எல்லாம் இயல்பு.

இந்த செயல்கள் எல்லாம் நமக்குள் எண்டார்ஃபின் என்ற என்சைமை சுரக்க செய்து நம்மை ஆசுவாசப்படுத்துகிறது எனப்து தெரியுமா?

அதுபோலத்தான் நாம் கை தட்டுவதும்…

மகிழ்ச்சியின்போதும் மற்றவர்களை பாராட்டவும்தான் கைத்தட்டுவதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்..

கைதட்டலின் போது உள்ளுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக அசிட்டைல் கொலைன் என்கிற என்சைம் சுரந்து நம் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்துவது தெரியாமலே நாம் அதை செய்துகொண்டு இருக்கிறோம்.

இதுபோல புதுடெல்லியில் ஒரு சாது தன் பக்தர்களுக்கு கைதட்ட வைத்தே கவலையைப் போக்குகிறாராம்..

அயல்நாட்டில் கார்ப்பரேட் கம்பெனி இதை…

இசை சிகிச்சை, சிரிப்பு சிகிச்சை யோகா மெடிட்டேஷன் என்று பல ஆயிரம் கோடி பணம் புழங்கும் தொழில் இது.

தமிழர் கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் என்பது நம் முன்னோர்கள் வகுத்த மூடநம்பிக்கை இல்லை..

எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கே..

இலவசமாக சொல்வதால் கிடைப்பதால் அதன் அருமை புரியாமல் அலட்சியப்படுத்தப்படுகிறது….

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்..

புரியாதவர் பரிகசித்து பரிதவிக்கிறார்…

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


புது வீடு கிரகபிரவேசத்தின் போது கோ பூஜை செய்வது மூடநம்பிக்கையா?

 


புது வீடு கிரகபிரவேசத்தின் போது கோ பூஜை செய்வது மூடநம்பிக்கையா?

நாம் புது வீடு கட்டி பால் காய்ச்சி குடிபுகும்நாள்…

பசுவையும் இளம் கன்றையும் வீட்டு வாசலில் உலக்கையை –போட்டு தாண்டி வீட்டிற்குள் அழைத்து வந்து பூஜை செய்து வழிபட்டு ஆசீர்வாதம் வாங்குவோம் இது ஏன் என்று தெரியுமா?

எல்லாரும் செய்யறாங்க.. நாங்களும் செய்தோம்….

ஆனால் பெரும்பாலானோர்க்கு…                                                  இதுக்கு விளக்கமும் தெரியாது காரணமும் தெரியாது..

அதனால்தான் திருட்டு திராவிட படிச்ச கூமுட்டை பகுத்தறிவு நடுநிலைகள் இதை எல்லாம் மூடநம்பிக்கை என்று கேலி செய்து பரிகசிக்கிறது..

செய்வதை ஏன் செய்கிறோம் என்று தெரிந்து செய்வோம்…

பசுவுக்கு துஷ்ட சக்திகள் அமானுஷ்ய சக்திகள் எதிர்மறை ஆற்றல் உள்ள இடத்தை அறியும் சக்தி உண்டு..

அதனால் அந்த பசுவை தன் கன்றுடன் வீட்டுக்குள் அழைத்து வருவார்கள். அந்த பசு கன்றுடன் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வீட்டின் அனைத்து அறைகளையும் சுற்றிவந்து அமைதியாக இருந்துவிட்டால்…..

அந்த வீட்டில் எந்தவித துஷ்டசக்திகளும் எதிர்மறை ஆற்றலும் இல்லை. மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் என்று உணர்ந்துகொள்ளலாம். அப்படி இல்லாமல்…

அந்த வீட்டு வாசப்படியை தாண்டி வீட்டின் உள்ளே வராமல் முரண்டு பிடித்தாலோ பயந்து கத்தினாலோ அல்லது தன் கன்றை அழைத்து வராமல் திரும்பி சென்று விட்டாலோ…

அந்த வீட்டில் ஏதோ தவறாக உள்ளது துஷ்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்றும். மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடம் இல்லை என்று உணர்ந்துகொள்ளலாம்.

அதற்காகதான் எளிமையான செலவில்லாத இந்த சடங்கு.

அன்று எல்லார் வீட்டிலும் பசுமாடு இருக்கும் சுலபமாக இந்த பழக்கத்தை கடைபிடித்தார்கள்.

இன்று நகரத்தில் பசுமாடு இல்லை வளர்க்க கூடாது.

அதனால்தான் நாம் வசிக்கும் வீடு எதிர்மறை ஆற்றல் உள்ளதா? துஷ்ட சக்தி உள்ளதா என்று அறியாமல்…

பகுத்தறிவு பேசி….

எதையும் பார்க்காமல் வீட்டுக்கு குடி வந்து எப்பொழுதும் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையை சந்தித்துகொண்டு இருக்கிறோம். .

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல…

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் அனைத்தும் நம் நன்மைக்கே..

இங்கு எதுவும் மூடநம்பிக்கை கிடையாது.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.                                 புரியாதவர் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி


. தானத்தில் சிறந்தது “கன்னிகாதானம்”

 


. தானத்தில் சிறந்தது “கன்னிகாதானம்”

 

வயிற்றுப் பசியைப் போக்குகிற அன்னதானமே தானத்தில் சிறந்தது என்று சொல்வார்கள்.

 

நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.

ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!

 

திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

 

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

 

கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும்.

 

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

 

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.

ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

 

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம் சொல்கிறது...

பெண்ணை பெற்றவன் பாக்கியவான் புண்ணியவான் என்று சொல்வது இதனால்தான்..

என்றென்றும் அன்புடன்

சுந்தர்ஜி


Saturday, November 9, 2024

முதலிரவில் பால் பழம் கொடுப்பது எதற்காக?

முதலிரவில் பால் பழம் கொடுப்பது எதற்காக?

 

திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா?

 

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

 

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.

அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

 

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.

 

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,

! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும். உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக.

பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

 

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல்

"இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்"அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள். திருமணத்தில். ...... 🙏

தமிழர் கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கம் வெறும் மூடநம்பிக்கை இல்லை.

என்றென்றும் அன்புடன்

சுந்தர்ஜி

 

 

 


 

Friday, November 8, 2024

பிள்ளை வரம் தருவாரா பிள்ளையார்?



பிள்ளை வரம் தருவாரா பிள்ளையார்?

அரசமரத்தடி பிள்ளையாரை சுற்றிவந்து அடி வயிற்றை தொட்டுப்பார்த்தாளாம் பெண். என்று சொல்வார்கள்..

உண்மையா? வெறும் மூடநம்பிக்கையா?

இதன் மூலம் முன்னோர்கள் நமக்கு சொல்லவரும் கருத்து என்ன?

அரசமர காற்றுக்கு கற்பபையை நன்கு செயல்படவைக்கும் திறனும் சிறு சிறு கோளாறுகளையும் நீர்கட்டி உட்பட சரி செய்யும் சக்தி உண்டு.

அதனால்தான் நம் பெரியவர்கள் திருமணம் ஆன புது பெண்களையும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களையும்…

அரசமரத்தடி விநாயகரை தினமும் 101 முறை 48 நாட்களுக்கு வலம் வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கைகூடும் என்று கூறினார்கள்.

விஷயம் பிள்ளையாரிடம் இல்லை. அரசமரத்தில் இருக்கிறது.

சும்மா அரசமரத்தை சுற்றச் சொன்னால் கேட்கமாட்டார்கள் என்றும் மனதையும் ஒருநிலைப்படுத்த முடியாது என்பதால்…

ஒரு பிள்ளையாரை வைத்து அதன் பின்னால் அரசமரத்தையும் வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி சுற்றிவரச்சொன்னார்கள்.

நம் பெண்களுக்கு அரசமரத்தடி பிள்ளையாரை பிடித்த காரணம் இதுதான்.

தமிழர் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. எல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான மருத்துவமே…

திருட்டு திராவிட பகுத்தறிவாளர்கள் சொன்ன அனைத்தும்தான் மூடநம்பிக்கை.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்.

தமிழன் திமிரானவன்

சுந்தர்ஜி