Sunday, September 27, 2015

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை


சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.
சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்ப
ு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt) ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது.
வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந் நடைப் பழக்கம் பயன்படும்.
எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.
-தமிழன் வருவான்

Saturday, September 26, 2015

வெற்றிலை போடுவது ஏன் ?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.
தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்
இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.
நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.
இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.
பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.
தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை
இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.
-தமிழன் வருவான்

உணவுகளின் தமிழ்ப் பெயர்கள் !!!

புரட்டிப்போட்டால் புரோட்டா ; 
சப்பையாய் இருந்தால் சப்பாத்தி ; 
பூரிப்பதால் பூரி ; உபரி,உப்புவதால் உப்புமா மற்றும் உப்பம் [ பஜ்ஜி ],
இட்டு அவிப்பதால் = இட்டவி;
அதையே சாப்பிட அளிப்பதால்,இட்டளி = இட்லி
இன்றைய தமிழகத்தின் தேசிய உணவு என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது புரோட்டா.
புரோட்டா என்ற பெயர் ஒரு தமிழ்ச் சொல்லாகும்!!
புரட்டு -----> திருப்பிப் போடு.
மைதாமாவால் ஆன மாவு உருண்டையை, தட்டை ஆக்கியபின் அதனை ஒரு புரட்டு புரட்டி எண்ணையைவிட்டு சமைப்பதால் புரோட்டா என்ற பெயர் வந்தது.
சில ஊர்களில் பரோட்டா என்று தவறாக உச்சரித்தாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புரோட்டா என்று சரியாகப் பேசுகின்றனர்.
இந்த உணவின் பிறப்பிடம் இன்றைய பஞ்சாப் பகுதி என்றுதான் அனைவரும் கூறி வருகின்றனர்!!
ஆனால் பஞ்சாபி மொழியிலோ உருது/இந்தி மொழியிலோ புரோட்டாவிற்கு வேர்ச்சொல் இல்லை!!!
இது மட்டும் அல்ல...இன்று வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் சப்பாத்தி,பூரி,ரோட்டி ஆகிய உணவின் வேர்ச்சொற்களும் தமிழ் மொழியிலேயே உள்ளன!!!
சப்பையாக இருப்பதால் சப்பாத்தி என்ற பெயர் வந்தது.(நம் ஊரில் சப்பையாக உள்ள ஒருவகையான கள்ளிச் செடிக்கு சப்பாத்திக் கள்ளி என்ற பெயர் உள்ளது).
எண்ணையில் போட்டவுடன் உப்பி, பூரிப்பதால் பூரி என்ற பெயர் வந்தது.
கோதுமை மாவை உருட்டி, தட்டையாகிய பின் சமைப்பதால் ரோட்டி(உருட்டி— >ருட்டி ->ரோட்டி ) என்ற பெயர் வந்தது.
அக்கால சிந்து சமவெளி மக்கள் வாழ்ந்த பகுதியில் தான் இன்றய சீக்கியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்கள் தமிழர்களின் குருதி உறவுகள் ஆவர்!!
சமசுகிருதத்தில் இருந்து தான் அனைத்து மொழிகளும் பிறந்தன என்பது பிராமணர்கள் செய்யும் அயோக்கியத்தனம் ஆகும்.
-தமிழன் வருவான்

Friday, September 25, 2015

எல்லா உயிரினங்களையும் மதிப்பதே நம் பண்பாடு!

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ஏன்..?
சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே.
சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு,பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும்,
அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம்.
அந்தச் கைப்பிடிச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கமே.
# இப்படி எல்லா உயிரினங்களையும் மதிப்பதே நம் பண்பாடு
-தமிழன் வருவான்

ஆமை சொல்லும் இரகசியம் !

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்
போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள்
நிறைய.
கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!
மத்திய
தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!
கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட
வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்
ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்
தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.
விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்
உண்டு. தான் பிறந்த
இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.
தமிழ்கத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. இதில்
பல ரகசியங்கள் இருக்கும் போல!
-தமிழன் வருவான்


Thursday, September 24, 2015

புரட்டாசியில் அசைவம் கூடாது... ஏன் தெரியுமா?


புரட்டாசி மாதத்தில் அசைவம் விலக்கி பெருமாளை சேவிக்க வேண்டும் என பல குடும்பங்களில் வழிவழியாக கடைபிடித்து வருகிறார்கள். அவர்களுக்கே அதற்கான காரணம் தெரியாது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி அதனால் அசைவம் கூடாது என்று தான் பலரும் நினைக்கிறார்கள்...
ஆனால் அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கிறது.
புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனாலும் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும். ஆனால் சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் அதிக கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். அசைவம் உண்பதால் வயிறு உபாதைகள் உண்டாகும். அஜீரண கோளாறுகளால் எந்த வேலையும் செய்ய முடியாமல் அதே நினைவாக இருக்கும். இதனால் சோம்பல்,மறதி,சலிப்பு உண்டாகும். இது கோபத்தையும்,காமத்தையும் அதிகம் தூண்டும். அதனால் உடல்நலம் கெடும்.
அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை, திடீர் வெப்ப மாறுதல் ஆகியவை நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல், சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். துளசி தீர்த்தம் பெருமாள் கோவிலில் தனி சிறப்பு என்பதை நாங்கள் சொல்லவும் வேண்டுமோ ..!
இப்போது தெரிந்து கொண்டீர்களா நண்பர்களே..!!!
பலரும் அறிய பகிருங்கள் நட்புறவுகளே..!!!
-தமிழன் வருவான்

மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் அறிவோம் ..!!!


இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டுவது முக்கிய சடங்காகும். இப்போது மஞ்சள் கயிறில் தாலி கட்டாமல் தங்கத்தில் அணிவிக்கிறார்கள்.
அதனால் தாலியில் போடப்படும் மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? என்பது இன்று பலருக்கும் தெரியவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கிறது.
1.
* முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை(வாரிசு) ஆரோக்கியமாகவும், சிறந்த அறிவாளியாகவும் திகழ, படைக்கும் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, முதல் முடிச்சு போடப் படுகிறது.
* இரண்டாவது முடிச்சு போடும்போது, ஆரோக்கியமான, அறிவாளியான குழந்தை பிறந்தாலும், அக்குழந்தை நற்குணங்களோடு பிறருக்கு உதவி செய்து நல்லவதனாக திகழவும், செல்வச் செழிப்புடன் வாழவும், காக்கும் கடவுளான திருமாலையும், செல்வங்களை அள்ளித்தரும் லஷ்மியையும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப் படுகிறது.
* மூன்றாவது முடிச்சு போடும் போது, ஆரோக்கியமான, அறிவான குழந்தை பிறந்து, அது நற்குணங்களோடு செல்வச் சீமானாக வாழ்ந்தாலும், அக்கிரமங்களை தட்டிக்கேட்டு, அவை தலை தூக்கும்முன்பே, அழித்து தர்மத்தை நிலை நாட்ட‍, அழித்தல்ே தொழிலை மேற்கொண்டிருக்கும் சிவனையும், வீரத்திற்கு பெயர் பெற்ற‍ பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது.
2. மணமக்கள்ப இருவரது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் ஒன்று பட்டு வாழ்ந்திருக்க‍
3. கணவன் மனைவி இருவருக்கும் உள்ள இணைப்பு, இரு குடும்பங்களின் இணைப்பு ஆகும். மூன்று நாத்துனர் முடிச்சு. ஒரு பெண் ஒரு இடத்தில் பிறந்து வேறு இடத்தில் நாத்து போல் இடம் பெயர்வதால் அவர்கள் நாத்துனர் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி வரும் பெண், இந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு உரிய இடத்தை நிரப்புவாள் என்பதற்காக மூன்றாம் முடிச்சு.
4. பெண்ணுடைய கடந்த காலத்தில் ஏற்பட்ட மற்றும் நிகழ் கால, எதிர் காலத்தில் ஏற்படும் விஷயங்களுக்கு நான் பொறுப்பாவேன் என்று ஆண் உறுதி அளித்தல்.
5. நம்முடைய பெற்றோர், விருந்தாளி, பித்ருக்கள் ஆகிய மூவருக்கும் செய்ய‍ வேண்டிய‌ கடமையில் இருந்து அவர்கள் தவற மாட்டார்கள் என்று உறுதி அளித்தல் .
6. பிறந்த வீட்டு பெருமைகளையும், புகுந்த வீட்டு பெருமைகளையும் செவ்வனே எடுத்துச்சென்று எதிர்கால சந்ததியினருக்கு பரிசாக கொடுத்து, குடும்ப பெருமைகளை காப்பாற்றும் பெரும் பொறுப்பை பெண்ணுக்கு அளித்தல்ட.
-தமிழன் வருவான்