Friday, September 4, 2015

தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.
சீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார் . சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது . தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப் படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .
இவரது முதல் புத்தகமான 'சீனாவில் இன்ப உலா ' என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார். தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் .
இப்புத்தகத்தை எழுத தூண்டியவர்கள் இவரது வானொலி நேயர்களே. இவர்களே கலைமகளுக்கு ஆயிரக்கணக்கில் தரைவழி அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி சீனா பற்றி தாங்கள் அறிந்து கொள்ள தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் .
சீன வானொலி ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் அஞ்சல்களை தனது வாசகர்களிடம் இருந்து பெறுகிறது . சீனாவில் உள்ள 60 பன்னாட்டு வானொலி சேவைகளில் தமிழ் மொழிப் பிரிவுக்கு தான் இத்தனை கடிதங்கள் அனுப்பப் படுகிறது . காரணம் தமிழ் நேயர்கள் இந்தியா , இலங்கை, மலேசியா , சிங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்து சீன வானொலியை ஆர்வமுடன் கேட்கின்றனர் .
சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலையில் கலைமகள் தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சீனாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் ஒரே பல்கலைகழகம் இதுவே ஆகும். பட்டப் படிப்பு முடித்தவுடன் இவர் சீன வானொலியில் அறிவிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார் . தமிழ் படிக்கும் சீனர்களை அதிக அளவில் சீன வானொலி வேலைக்கு அமர்த்துகிறது . தமிழ் படித்தால் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை இங்கிருக்க , தமிழ் படித்தால் சீனாவில் வேலை உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .
கலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் . பொதுவாக சீன மக்களுக்கு இந்திய என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.
லைப் ஒப் பை என்ற ஆங்கில திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து சீன மக்களுக்கு தென்னிந்தியா குறித்து ஆர்வம் அதிகமாகி உள்ளது என்று கலைமகள் கூறுகிறார் . இப்படம் புதுவையில் எடுப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது .
கலை மகள் போன்ற சீனர்கள் தமிழ் மொழி , பண்பாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகையில் தமிழக மக்களோ தமிழில் பேசுவதை, தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக எண்ணுகின்றனர் என்பது கசப்பான உண்மை தான். இவரை பார்த்தாவது தமிழர்கள் இனி திருந்த வேண்டும் . தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழர்கள் தங்கள் மொழியை போற்ற வேண்டும் . கலைமகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Thursday, September 3, 2015

உலகிலேயே வேறு எங்கும் காணப்படாத இயற்கை அறிவு சார்ந்த டெக்னிக்!!!

பல ஆயிரம் ஆண்டு களாக தமிழன் பயன்படுத்தி வந்த
ஊருணி டெக்னிக், 
‘கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த ஊருக்கு நான்
வரும்போது, குடி தண்ணிக்கு நாய் அலைச்சல் பேய்
அலைச்சல்தான். இப்ப ரெண்டு வருஷமாதான்
தண்ணி பஞ்சமில்லாம சந்தோஷமா இருக்கோம்.
எல்லாத்துக்கும் காரணம் அந்த மகராசன்தான்…
செலவே இல்லாம எங்களுக்குச் சுத்தமான தண்ணீ
கெடைக்குது. தவிச்ச வாய்க்கு தண்ணீ தந்த அந்த
மகராசனை மறக்கவே மாட்டோம்”
- சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றம்
பக்கத்திலிருக் கும் எடையூர் கிராமம் கைகூப்பிக்
கொண்டிருக்கிறது. அந்த மகராசன்…
ஜெர்மனியிலிருந்து இங்கே வந்து இறங்கிய டிர்க்
வால்த்தர்.
நிலவியல், தண்ணீர் மேலாண்மை ஆகியவற்றில்
தலா ஒரு எம்.எஸ்.சி பட்டம் பெற்றிருக்கும் இந்த
வால்த்தர், தமிழகத்தில் தண்ணீர்
மேலாண்மையை வளப்படுத்தும் வகையில் தமிழக
அரசுடன் கைகோத்து செயல் பட்டு வருபவர். இவரின்
திட்டமே தமிழகத்தில் பல்லா யிரம் ஆண்டுகளாக
நமது முன்னோர்கள் குடிநீர் ஆதார மாக
பயன்படுத்தி வந்த ஊருணி களுக்கு (குளங்கள்)
மீண்டும் உயிர் கொடுப்பதுதான்.
அதுவும்
சுற்றுச்சூழல் பாதிப்பின்றி இயற்கை யான
வழிமுறைகளை பயன் படுத்தி, சுத்தமான
குடிநீரை கொடுப்பதோடு நிலத்தடி நீரையும்
உயர்த்துவது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்
வால்த்தர். இந்த விஷயத்தில் இவருக்கு பெரும்
உதவியாக இருப்பது அண்ணா பல்கலைக் கழக
சுற்றுச்சூழல் துறைதான்!
அக்கம்பக்கத்து கிராமங் களான எடையூர், கீரப்பாக்கம்,
பட்டிக்காடு என்று மூன்று கிராமங்களில்
சோதனை முயற்சி யாக தொடங்கப்பட்ட
ஊருணி திட்டம், தற்போது இரண்டு ஆண்டுகளைத்
தாண்டி வெற்றி கரமாக கைகொடுத்துக்
கொண்டி ருக்க… அடுத்தக் கட்டமாக தமிழகம்
முழுவதும் பரவலாக இந்தத் திட்டத்தை நீட்டிக்கும்
வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்தச் சாதனையின் பின்னே நிற்கும் வால்த்தரிடம்
பேச்சுக் கொடுத்தபோது, ”முழுக்க முழுக்க
இயற்கை சார்ந்த டெக்னிக்தான்
பயன்படுத்தியுள்ளோம். ஊருணிக்கு வரும்
மழை தண்ணீர் முதல்படியாக செக் டேம் ஒன்றின்
மூலம் வடிகட்டப்படுகிறது. பெரிய பெரிய
குப்பைகள் இங்கே தடுக்கப்படும்.
அதற்கு அடுத்து குளத்துக்கு செல்லும்.
குளக்கரையில் ஒரு மூலையில்
கிணறு ஒன்று உருவாக்கியுள்ளோம்.
குளத்திலிருந்து கிணற்றுக்கு தண்ணீர் செல்லும்.
இரண்டுக்கும் நடுவில் கற்கள், மணல்
ஆகியவற்றை வைத்து இயற்கை வடிகட்டி ஒன்று அமைத்துள்
தண்ணீர் வடிகட்டப்பட்டு கிணற்றுக்கு செல்கிறது.
கிணற்றிலிருந்து அடி பம்ப் மூலமாக
தண்ணீரை எடுத்து ஒரு தொட்டிக்கு அனுப்ப
வேண்டும். அந்தத் தொட்டியும்
இயற்கை வடிகட்டிதான்.
அதிலிருந்து கிடைக்கும்
தண்ணீரை அப்படியே குடிக்கலாம்” என்று சொன்னவர்,
”ஆண்டில் சில மாதங்கள் தண்ணீர்
வற்றி விடுகிறது. இதற்கு என்ன
காரணம் என்று ஆராய, குளக்கரையில்
வானிலை கருவிகளை பொருத்தியுள்ளோம்.
எங்களுடைய ஆராய்ச்சியில் கிடைத்த
முடிவுகளை வைத்து, அருகிலிருக்கும்
பட்டிக்காடு கிராமத்தில் அமைக்கப்பட்ட ஊருணி மிக
வெற்றிகரமாக செயல்படுகிறது. வருடத்தில்
ஒரு மாதம் மட்டும்தான் தண்ணீர் குறைகிறது.
எல்லாக் காலத்திலும் தண்ணீர் நிற்கும் வகையில்,
ஊருணிகளை உருவாக்குவது தான் என்
ஒரே லட்சியம். ஒரு வருட ஒப்பந்தத்தில் இந்தியா வந்த
நான், இதற்காகவே என் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளேன்”
என்று கட்டை விரலை உயர்த்திச் சொன்னார் வால்த்தர்.
நிறைவாக பேசியவர், ”தமிழ் நாட்டில் பயன்பாட்டில்
இருந்த இயற்கை சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவும்
ஆவணமாக்கி வைக்கப்படவில்லை. அதில்
ஊருணி யும் ஒன்று. பல ஆயிரம் ஆண்டு களாக
தமிழன் பயன்படுத்தி வந்த ஊருணி டெக்னிக்,
உலகிலேயே வேறு எங்கும் காணப்படாத
இயற்கை அறிவு சார்ந்த டெக்னிக்”
என்று சான்றிதழும் கொடுத்தார்.
ம்… நம்ம தலையில
மூளை இருக்குங்கிறதையே ஒருத்தர்
பறந்து வந்துதான் சொல்லித் தரவேண்டியிருக்கு!...

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ?
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் 
கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.
இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.
செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.
தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’.
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான் !!

Wednesday, September 2, 2015

நமது முன்னோர்களின் பிரம்மிக்கவைிக்கும் விஞ்ஞான அறிவு

 நமது முன்னோர்களின் பிரம்மிக்கவைிக்கும் விஞ்ஞான அறிவு – இதைப்படித்தால் நீங்களும் பிரம்மிப்பதுை நிச்சயம்
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து
உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது .
ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இட த்தில் கிணறு தோண்ட கு றைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல்நாள் இரவு தூவி விடவே ண்டும்.
அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவ து தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறுவெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கு ம் என்கிறார்கள் .
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . .
கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும்.
பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

மலைக்கோயில் கட்டியது ஏன்?


நம் முன்னோர், மலைகளில்
கோயில்களை அமைத்து,
வழிபாடு செய்ததற்கு ஆன்மிகக்காரணம் மட்டுமல்ல.
மருத்துவ காரணமும் இருக்கிறது.
நம் ஆரோக்கியம்
கருதியே அவர்கள் இவ்வாறு செய்தனர்.
அடிவாரத்தில் இருந்து நடந்து மலையேற வேண்டும்
என்பதற்காக, பாத விநாயகர் கோயிலை அடிவாரத்தில்
கட்டினர். மலைப்பாதையின் இருபுறமும் வனம் போல
திறந்தவெளியாக இருக்கும்.
அங்குள்ள மூலிகைகள்
மீது பட்டு வரும் காற்று மருத்துவகுணம்
கொண்டது. அது உடலுக்கும் உள்ளத்திற்கும்
புத்துணர்ச்சி தரும். மேடு பள்ளங்களில்
ஏறி இறங்கும்போது, தசைகள் வலுவடையும்.
தேவையற்ற கொழுப்பு, சதை கரைந்து போகும்.
காலுக்கு சிறந்த பயிற்சி ஏற்படும்
வியர்வை வெளியேறும். நல்ல பசி உண்டாகும்.
மலைப்பாதையிலுள்ள ஊற்று, சுனைநீரில்
மருத்துவகுணம் நிறைந்திருக்கும்.
திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற
தலங்களில் மலையைச் சுற்றி வந்து வழிபடுவதும்
இதற்காகத் தான்.
கிரிவலம்
வரும்போது விளையாட்டாகப் பேசிக்
கொண்டு சுற்றக் கூடாது. இறை நினைவுடன்
மட்டும் சுற்ற வேண்டும்.
இதனால்
தியானத்திற்கு ஈடாக மனம் ஒருநிலைப்படும். மனம்
அடங்கினால் உடலுக்கு நல்லது.
இதன் அடிப்படையில்
தான் மலையில் கோயில்கள் கட்டப்பட்டன. இன்றோ, சில
மலைக்கோயில்களில் வாசல் வரை வாகனங்களில்
செல்லும் வழக்கம் வந்து விட்டது.
முடியாதவர்களும், முதியவர்களும் மட்டுமே இந்த
வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றவர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தால்,
இறையருளுடன் உடல்நலமும் பெறலாம்.

Tuesday, September 1, 2015

நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?


அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது. நடு விரல் உங்களை குறிக்கிறது மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது
சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது.
உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்.
பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.
பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்
இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும் அதாவது உங்களின் பிள்ளைகள்.
உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள். பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிறோம்.

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது.!

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது
காரணங்கள் என்ன?
இதோ தெரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.
இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்
குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.
அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..