Tuesday, January 6, 2015

நமக்கு கடந்த காலம் முக்கியமா?

இன்று''"

நமக்கு கடந்த காலம் முக்கியமா?

இல்லை நிகழ்காலமும், எதிர்காலமும் தான் முக்கியமா?

என்று கேட்டிருந்தேன்.................. . யாருக்கும் இதுக்கு கூட பதில் சொல்ல விருப்பம் இல்லை. . நீங்கள் எப்படி..........வருத்தமாக இருக்கிறது................. . மன்னியுங்கள்..................... . முதலில் ...............நம் நிலை அறிந்தால்தான் எதையும் செய்ய முடியும்.

உதாரணத்திற்க்கு நம் கையில் எவ்வள்வு பணம் இருக்கிறது என்று தெரிந்தால்தான் . அதை எப்படி செல்வு செய்வது என்று எண்ண முடியும். .

நாம் எங்கு நிற்கிறோம்(தரையா-நீரா-பாறையா - மலையா) என்று தெரிந்தால்தான் அடுத்த அடி எடுத்து வைக்க முடியும். .

சுவர் இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும். . நீங்க ஆரோக்கியமாக இருந்தால்தான் எல்லாம் சாப்பிட முடியும்,

சாதிக்க முடியும். இப்ப நீங்க என்ன சாப்பிடனும் என்பதை நீங்க தீர்மானிக்கவில்லை. உங்க மருத்துவர் தீர்மானிக்கிறார்.

எவ்வளவு வருத்தமான விஷயம்.... . நம்மை நாம் உணர்ந்தால்தான் முன்னால் செல்ல முடியும். . நம்மை நாம் உணரணும் என்றால் கடந்து வந்த வழியை அறியனும். .

அதைத்தான் நான் சொல்கிறேன். . ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். .

எதுக்கு பழைய நம் முன்னோர்கள் சொன்னதை படிக்கனும் என்று................... . இன்று விமான ராகெட் வளர்ச்சி அனைவருக்கும் தெரியும்...... . ஆனால் இது நாம் கண்டுபிடித்த டெக்னாலஜியில் 100 சதவீதத்தில் 3 சதவீதம் மட்டுமே என்றால் உங்களால் ந்ம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும்................ . நம்முடைய வைமனிகா சாஸ்திரம் அனைத்து விதமான விமான ராகெட் டெக்னாலஜி பற்றி வரைபடத்துடன் விளக்குகிறது. கிடைத்தால் வாங்கி படித்துப்பர்ருங்கள்

பிரமித்து போவீர்கள். .

மகாபாரத காலத்திலேயே அணுகுண்டு பயன் படுத்திய ஆதாரம் கிடைத்திருக்கிறது................... . அப்ப உள்ள நம்ம அறிவு இப்ப எங்கே சென்றது. யாகுக்கு விலையானோம். ஏன் அறிய மறுக்கிறோம்? .

இப்ப உள்ள இளைஞன் ஒருவன் விமான படிப்பு படித்து வைமனிகா சாஸ்திரம் படித்திருந்தால்................. . அவன்தான் நாளைய விண்வெளியை ஆட்சி செய்வான் .

நம்ம பழைய வாழ்க்கையை தெரிந்துகொள்ளவில்லை என்றால் வேண்டாம் என்றால் வருங்காலத்தில் என்னாகும் தெரியுமா? . நம்முடைய சந்ததி அழியும். .வருங்கால சந்ததிகள் மலடியாகிகொண்டு இருக்கிறோம்.

அது உங்களுக்கு புரியுதா? . நாம் எல்லோரும் பிராய்லர் கோழிகளாக ஆக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். விளங்குதா? . நம்ம தாத்தாவுக்கு பாட்டிக்கு 10 க்கு மேற்பட்ட குழந்தைகள், நம் பெற்றோருக்கு ஒரு சில குழந்தைகள். ஆனால் வரும் காலத்தில் டெஸ்ட் டியூபில் குழந்தைகள் உருவாகின்றன.

இன்றைய பெண்கள் ஆண்கள் மலடாக்கப்ப்ட்டு கொண்டு இருக்கிறார்கள் புரியுதா? . புரிந்தால் பழைய புத்தகங்க்ளை தேடி ஓடுங்கள். . என்னை கேளுங்க்ள்.......... . இல்லை என்றால் பி.எஸ். வீரப்பா வசனம்தான்....... . நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்........ . வயிறு எறியுந்துங்க................. . இப்படி உங்க எல்லாருடைய புத்தியும் மழுங்கடிக்கப்ப்ட்டு விட்டதே என்று வருத்தமாக இருக்குது............ . ஓடுங்க ஓடுங்க பணத்துக்கு பின்னால ஓடும் பிணங்களே......ஓடுங்க..............உங்கள் பின்னால் வர உங்களுக்கு சந்ததி இல்லை.................... . எதுக்கு உங்களுக்கு இவ்வளவு பணம்............. . யார் அனுபவிக்க............................... . தொழில் வளர்ச்சி................ . யாருக்கு இதெல்லாம் .................... . எப்ப இதைப்பத்தி யோசிக்கறீங்களோ .............. அப்ப என்னை கூப்பிடுங்க.................. . இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.......... . வாழ்த்துக்கள். . இது ஜூலை 7 நாள் 2014 பதிவு- தெரியாதவர்களுக்காக மறுபதிப்பு.

நாளை"""

Monday, January 5, 2015

அனைவருக்கும்

அனைவருக்கும் மதிய வணக்கம் . . பாசத்துக்குரிய நம் மதுரையில் உள்ள மாற்று திறனாளி சகோதரி நாகலட்சுமி கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு சுயமாக யார் உதவியும் இன்றி நடக்க சூர்யா சமூகநல அறக்கட்டளை சார்பாக . . . ஈரோடு மாவட்ட மாற்றுதிறனாளிகள் சங்க தலைவர் திரு. அருள்பிரகாசம் அவர்கள் ஆலோசனையின்படியும் அவர்கள் மூலமாகவும் அலுமினிய (வாக்கிங் ஸ்டிக்) கைதடி வாங்கி கொடுக்கப்பட்டது. அது நம் சகோதரிக்கு சவுகர்யமாக இருக்கிறதா என்று நாம் அறியோம். ஏனென்றால் அவர்களை யாம் நேரில் கண்டதில்லை. அலைபேசி தொடர்பு மட்டுமே. அவர்கள் எம்மிடம் அலைபேசியில் உரையாடியபடி வாங்கி அனுப்பி உள்ளோம். அவர்கள் திருப்தி கடவுள் திருப்தி. அவர்கள் அலைபேசி எண் இங்கு பதிக்க அனுமதி கோரவில்லை. மன்னிக்கவும். . . இது நன்றியை எதிர்பார்த்து பதியப்பட்ட பதிவு இல்லை. உண்மையில் தேவை உள்ள வரியவர்களுக்கு நம் சூர்யா சமூகநல அறக்கட்டளை சேவை செய்ய தயங்காது என்பதை வெளிப்படுத்தவே.. . . நல்லது.

Sunday, January 4, 2015

Our Dreams

நம் எண்ணகளின் காலை வணக்கங்கள்

ஐந்து நட்சத்திர இடத்தை கொடுத்த முகநூலுக்கு நம் எண்ணங்களின் கோடான கோடி நண்றிகள் சூர்யா அறங்கட்டளை

மது ஏன் குடிக்க கூடாது......?

மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. 

மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. 

இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. 

 இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. 

இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது.

 இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. 

 இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். 

வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும். 

 மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். 

 இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும்.

 இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. 

இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும். குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். 

மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.

Friday, January 2, 2015

பேசும் முறைகள்

பேசும் முறைகள்... தாயிடம் - அன்பாக பேசுங்கள்..! தந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..! ஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..! துணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..! சகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..! சகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..! குழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..! உறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..! நண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..! அதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..! வியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..! வாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..! தொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..! அரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..!

ஆசிரியர் ஒருவர்

ஆசிரியர் ஒருவர் கணினி வகுப்பு நடத்தி கொண்டிருக்கும் போது திடிரென்று மாணவன் ஒருவன் எழுந்து ,'கம்ப்யூட்டர் ஆணா இல்ல பெண்ணா என்று கேட்டான் . ஆசிரியருக்கு பதில் தெரியவில்லை . மொழி அகராதியிலும் இதற்கான விடை இல்லை. எனவே, வகுப்பிலுள்ள மாணவர்களை ஒரு குழுவாகவும் , மாணவிகளை இன்னொரு குழுவாகவும் பிரித்து,இதற்கான விடையை கண்டுபிடியுங்கள் என்றார். நீங்கள் சொல்லும் விடையை நிருபிக்கும் வகையில் நான்கு உதாரணங்களையும் கூற வேண்டும் என்றார். இரண்டு குழுக்களும் தனித்தனியாக கூடி கம்ப்யூட்டர் குறித்து ஆராய்ச்சி செய்தது. பின்னர் மாணவியர் அனைவரும், 'கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது' என்றும், மாணவர்கள் அனைவரும்,'கம்ப்யூட்டர் ஒரு பெண்' என்றும் கூறினர். அதற்கு அவர்கள் கூறிய விளக்கம் என்ன தெரியுமா??? மாணவியர் கூறிய விடை: கம்ப்யூட்டரில் ஏதாவது வேலை செய்ய வேண்டுமெனில் முதலில் அதை , 'பவர் ஆன்' செய்தல் வேண்டும் ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன , இருந்தாலும் கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை கம்ப்யூட்டர்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்சனைகளாக அமைகின்றன. ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்...'ஐயோ.. சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே'...என்று! இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் ஆண் இனத்தை சேர்ந்தது தான் என்று மாணவிகள் முடிவு கூறினர். கம்ப்யூட்டர் பெண்ணுக்குத் தான் சமம் என்பது மாணவர்களின் கருத்து. அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா? கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர யாருக்கும் எளிதில் புரிவதில்லை. ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும். நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு. ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே , தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும் இந்த காரணங்களால் கம்ப்யூட்டர் பெண் தான் என்று மாணவர்கள் முடிவு கூறினர். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நண்பர்களே உங்கள் அனுமானம் என்னவோ?

They do not cut trees oa World

மரங்களை வேட்டாதிா்கள்