Friday, February 28, 2020

இன்று – கம்பூசியா நேற்று – கம்போடியா


காம்போஜம்…!!!
#இன்று – #கம்பூசியா
 #நேற்று – #கம்போடியா
 அதற்கு முன்னால் – காம்போஜம்..!
– 9ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை
 காம்போஜம் என்று பெயர் பெற்றிருந்த இந்த கம்போடியா
 நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்கள் –
ஜயவர்மன்,
 #இந்திரவர்மன்,
 #யசோவர்மன்,
 #சூர்யவர்மன்,
 #ஜயவர்மன் -2,
 #ஜயவர்மன் -3,
 #ஜயவர்மன் -4,
 #ஜயவர்மன் -5,
 ஜயவர்மன் -6, மற்றும்
 #ஜயவர்மன் -7
என்று அத்தனை பேரும் தமிழ் மன்னர்கள்.
இன்றைய கம்போடியாவில் இன்னமும் உள்ள இந்த #மன்னர்கள் காலத்திய தமிழ் கல்வெட்டு ஒன்று இங்கு காண்போம்.
#உலகம் தட்டையா – உருண்டையா ?
– என்றே தெரியாமல் மேற்கத்திய நாடுகள்
 விழித்துக் கொண்டிருந்த வேளையில்
 #தமிழன் கிழக்கே வெற்றிகளைக்
 குவித்துக்கொண்டிருந்தான் !
#தமிழ் நாடு எங்கே – கம்போடியா எங்கே ?
 கடல் வழியே போனால் கிட்டத்தட்ட 3000 கிலோமீட்டர்கள் !
எத்தகைய வலிவும், துணிவும், அறிவும், வீரமும் இருந்தால் இவ்வளவு தூரம் படையெடுத்துச்சென்று வெற்றி பெற்று அரசாட்சியை நிலை நிறுத்த முடியும் ?
#பல்லவ, #சோழ மன்னர்கள் காம்போஜம் வரை சென்று தங்கள் வலிமையை நிரூபித்த பிறகு தங்கள் படைத்தளபதிகளையே அங்கே அரசராக நியமித்து விட்டு வந்தார்கள்.
அவர்களின் வழி வந்தவர்கள் தான் மேற்கூறிய காம்போஜத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் !
ஒன்பதாவது நூற்றாண்டில் தமிழ் மன்னன் ஜெயவர்மனுடன் துவங்கிய இந்த வம்சம் காம்போஜத்தை அந்த நாட்களில் தெற்காசிய நாடுகளில் மிக வலுவானதொரு ஆட்சியாகஉருவாக்கியது. தொடர்ந்து சுமார் 500-600 ஆண்டுகளுக்கு, தமிழ் மன்னர்களின் ஆட்சியில் இருந்த காம்போஜம், கொஞ்சம் கொஞ்சமாகத்
 தாய்த் தமிழ்நாட்டுடன் இருந்த தொடர்பை இழந்தது. படையெடுப்பின்போது போய்க்குடியேறிய தமிழர்களைத்தவிர பிற்காலங்களில் அதிகம் பேர் தமிழ் நாட்டிலிருந்து இங்கு குடிபெயரவில்ல என்பதே இதன் முக்கிய காரணம்.
சுற்றிலுமிருந்த #லாவோஸ், #வியட்னாம், #தாய்லாந்து ஆகிய நாடுகளின் ஆதிக்கத்தில் சிறிது சிறிதாக தமிழ் மணத்தையும், இந்து மதப் பழக்க வழக்கங்களையும்
 இழந்தது. சுற்றிலுமிருந்த நாடுகள் அனைத்திலும் பரவிய பௌத்த கலாச்சாரம் இங்கும் பரவியது.
15வது நூற்றாண்டுக்குப் பிறகு, சுமார் 500 ஆண்டுகளுக்கு இங்கு ஒரு இருண்ட நிலையே நிலவியது. காம்போஜம் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு பல படையெடுப்புகள் – காலனி நிலை..!
1993க்குப் பிறகு தான் காம்போஜம் என்கிற #கம்போடியா என்கிற இன்றைய கம்பூச்சியா நிலைத்து நிற்க ஆரம்பித்தது. இன்றைய கம்பூச்சியாவில் குறிப்பிடத்தக்க அளவில் #தமிழர்கள் இல்லையென்றாலும்...
பண்டைத் தமிழர்களின் #பண்பாடு, #கலாச்சாரம், தமிழ்ப் பெயர்கள் ஆகியவை இந்த மக்களின் ரத்தத்தில் கலந்தே வந்திருக்கிறது. #‘ராமாயணம்’ இவர்களுக்கே உரிய
 முறையில் உருமாற்றம் பெற்று இப்போதும் நடன, நாடக உருவத்தில் உலா வருகிறது.
உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான #யாத்ரிகர்கள் இன்று வந்து ஆச்சரியத்தோடு காணும் ‘அங்கோர் வாட்’ கோயில்கள்தான் தமிழர்கள் இங்கு வாழ்ந்த வளமான வாழ்க்கைக்கும், கலைச்செழுமை மிக்க தமிழ்ப்பண்பாட்டிற்குமான எஞ்சியிருக்கும் சாட்சி.
இங்கிருந்த மக்கள் பருவக்காற்றையும், மழையையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில், முதல் முதலாக கிழக்கு பராய் என்கிற மிகப்பெரிய
 நீர்த்தேக்கத்தை உருவாக்கி பஞ்சமில்லாத நாட்டை உருவாக்கினான் தமிழ் மன்னன் யசோவர்மன். அவன் 10 நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய நீர்த்தேக்கம் இன்றும் உள்ளது.
உலகப்புகழ் வாய்ந்த ”அங்கோர் வாட்” கோவில்களின் மனதை மயக்கும் காட்சிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் –விஷ்ணு, இந்திரன், சிவன் ஆகியோர்களுக்கான கோவில்களையும், பிற்காலத்தில் புத்தமதத்தின் செல்வாக்கு தழைத்தோங்கிய கடைசி தமிழ் மன்னன் ஜயவர்மன்-7 காலத்தில், போதிசத்வரின் 216 முகங்கள் அடங்கிய புத்தருக்கான திருக்கோயில் ஒன்றும் கட்டப்பட்டன !
#வாழ்க தமிழ்...!