Wednesday, June 29, 2016

A boat founded in angorvat temple in Indonesiya which was built by II suryavarman Tamilan at 1207

A boat unearthed at a construction site in Siem Reap’s Angkor Thom district in April was made in 1207 AD, according to carbon dating results announced on Friday.


The 809-year-old vessel was carved from a single tree trunk during the reign of King Jayavarman VII.

Apsara Authority spokesman Long Kosal said the results, produced by a radio carbon dating lab in New Zealand, were announced at the biannual meeting of the International Coordinating Committee for Angkor.

“I believe this is the oldest boat that has been found so far,” Kosal said.

“Apsara believes this will be another great piece of information, which will enlighten us to understand how the Khmer people were using the boat.

“This finding will help to give us more shape to the history of Cambodia; there are many things we do not yet know about the reign of Jayavarman VII.”

Archaeologist Chen Chanratana said the find showed a continuity of boat-building stretching back hundreds of years.

“Before, we could see the image of the boat carved on the wall of the temple, but now we can see the actual boat that remains,” Chanratana said.

The vessel, currently submerged in a baray at Angkor Wat, is set to be displayed for tourists – either in a museum or as part of a travelling exhibition, but Kosal stressed it was crucial the boat was “wholly preserved”.

Monday, June 27, 2016

Just think . . .


Sinthu Culture - Tamilan

சிந்து சமவெளியில் கிடைத்த 4000 ஆண்டுகள் 
பழமையான தமிழ் செப்பேடு !!!
சிந்து நாகரீகம் தமிழ் நாகரீகம் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம் !!!
அனைவரும் அறிய வேண்டிய அரிய செய்தி!!!
அண்மையில் பாகிஸ்தானில் தனியார் தொகுப்பில் திரட்டி வைக்கப்பட்டிருந்த ஒன்பது செப்பேடுகள் வெளிவந்தன. சிந்துவெளி எழுத்தில் அமைந்த இந்த செப்பேடுகள் 2011 ஆம் ஆண்டில் ரிக்கு வில்லிசு என்பவரின் பார்வைக்கு வந்தன. XRF என்னும் அறிவியல் காலக்கணிப்பு முறையில் ஆராய்ந்து இதன் காலம் கி.மு 2600 - கி.மு 2000(4000 ஆண்டுகள் முந்தையது) என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த செப்பேடு தமிழில் 34 குறியீடுகளை கொண்டுள்ளது. வடிவத்திலும் மிக பெரியது. இதுவரை 5000 தமிழ் செப்பேடுகள் சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செப்பேட்டில் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியனைப்பற்றி குறிக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் இடப்புறத்தில் குள்ளநரித் தலையோடு ஓக நிலையில் அமர்த்த சித்தரின் உருவம் நக்கநியனைக் குறிப்பதாக இருக்கலாம்.
செப்பட்டில் இருக்கும் சொற்றொடர் :-
" கூனயத்தம் சாஞ்சகன் அப்புந்தி தங்கவிகைப் பண்ணன் புணையன் காளண்ணன் பண்ணிவச்ச கப்ப(ல்) அவில்ந்து (அமிழ்ந்து) வந்த நக்கனியன் "
பொருள் :-
கூனயத்தம் என்பது ஊர்ப்பெயர். அவ்வூரில் வாழ்ந்த ' 'சாய்ந்தகண் அப்புந்தி தண்கவிகை பண்ணன் ' என்பவனுக்கு காளண்ணன் என்னும் கப்பல் கட்டுபவன் புணையாக அதாவது உற்ற தோழனாக இருந்தான். காளண்ணன் கட்டிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. அதிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியன் என்பதே இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ள செய்தியாகும்.
இது 14 தமிழ் சொற்களை கொண்ட நெடுந்தொடர். இதனை மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதலாம். இந்த செப்பேட்டின் இடது புறத்தில் குள்ளநரி முகம் கொண்ட ஓக நிலையில் அமர்ந்த சித்தரின் உருவம் உள்ளது.
இதிலிரு ந்து இரண்டு செய்திகள் கிடைக்கிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கப்பல் கட்டி கடலை ஆட்சி செய்துள்ளனர் மற்றும் ஓக கலையில் அப்பொழுதே சிறந்து விளங்கியுள்ளனர்.

இத்தகவல் பேராசிரியர் இரா.மதிவாணன் எழுதிய "சிந்துவெளியில் கிடைத்த முந்துதமிழ்ச் செப்புப் பட்டயம் " என்னும் கட்டுரை

Thursday, June 23, 2016

Right Information Act 2005 - India


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
>
>

அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக,
1. நமது மாவட்ட எம்.பி. அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
2. அதேபோல் நமது தொகுதி எம்.எல்.. அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
எவ்வாறு பெறுவது?
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.
மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.
மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும்
தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.
நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது. 
கட்டணம் விவரம்:
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் தகவல் கேட்பது?
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.
தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.
மேல் முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.
மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
(வானவில் அருகில்) பழைய எண்: 273, புதிய எண்: 378, அண்ணா சாலை, (தபால் பெட்டி எண்: 6405) தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
விதி விலக்குகள் :
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம். ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம். உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம். டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.
தகவல் கேட்பவரை மிரட்டினால் என்ன செய்வது?
தகவல் கேட்பவரை மிரட்டுவது சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக காவல் துறையினரிடம் தகவல் கேட்கையில் இது போல் நிகழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், எந்த தகவலை கேட்கையில் மிரட்டல் வந்ததோ, அதே தகவலை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து நண்பர்களையோ உறவினர்களையோ, அதே தகவலை கேட்டு பல விண்ணப்பங்களை அனுப்பச் செய்யுங்கள். இது மிரட்டலை நிச்சயம் நிறுத்தும். இதையும் மீறி மிரட்டல் தொடர்ந்தால் வழக்கறிஞர்களை அணுகவும்.
இதற்கான இணையதளங்கள்:
http://www.righttoinformation.gov.in

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.comஎன்ற தளத்தைப் பார்வையிடலாம்.
ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.